ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா இன்று குருநாகல் - மாளிகாபிடிய விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இதன்படி இன்று ஊர்வலமாக கட்சி உறுப்பினர்கள் மாளிகாபிடிய விளையாட்டரங்கிற்குள் செல்லவுள்ளனர்.
இதேவேளை, இன்று மாலை 03.00 மணியளவில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதுஇவ்வாறு இருக்க, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உட்பட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த, எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரியவந்துள்ளது.

