உல்லாசப் பயணிக்கு நட்டஈடு செலுத்த உத்தரவு



எம்.எஸ்.எம்.ஹனீபா-

 பொத்துவில் அறுகம்பைப் பிரதேசத்திலுள்ள  உல்லாச விடுதி ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளான உல்லாசப் பயணிக்கு 60 ஆயிரம் ரூபாயை நட்டஈடாகச் செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாஹாப்தீன் உத்தரவிட்டார். 

கடந்த ஜுலை மாதம் குறித்த உல்லாச விடுதியில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வின்போது, 6  பேர் ஒன்றுசேர்ந்து குறித்த  உல்லாசப் பயணியை பொல்லால் தாக்கியுள்ளனர்.   இதை அடுத்து, குறித்த 6 பேரும்; கைதுசெய்யப்பட்டு நீதிமன்றப் பினையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை புதன்கிழமை (28) நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, தாக்குதலுக்கு உள்ளான உல்லாசப் பயணிக்கு தாக்கிய நபர்களை நட்டஈடு செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.