(கிசாந்தன்)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தலைநகர் கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தலைநகர் கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஹட்டன் – டயகம தோட்டத் தொழிலாளர்களும் சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டயகம தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களால் காலை 9 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழில்புரியும் தங்களுக்கு விரைவில் சம்பளத்தை உயர்த்தித் தருமாறு இதன்போது தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை, சம்பள உயர்வை வலியுறுத்தி பத்தனை – போகாவத்தை தோட்டத் தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போகாவத்தை நகரிலிருந்து கண்டனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு, போகாவத்தை தேயிலைத் தொழிற்சாலையை சென்றடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
தங்களின் நியாயமான சம்பளக் கோரிக்கைக்கு உடன் பதில் வழங்குமாறு போகாவத்தை தோட்டத் தொழிலாளார்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி ஹப்புத்தளை – தங்கமலை தோட்ட மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தலைநகர் கொழும்பிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு நாராஹன்பிட்ட பகுதியிலுள்ள தொழில் திணைக்களத்திற்கு அருகில் நாவல வீதி சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

