பழையவற்றை, பழகியதை மறக்காத மைத்திரி



ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஹிரியால பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகவுகளில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் ஹிரியால கொகரெல்லையில் உள்ள ஒரு வீட்டிற்கு எவ்வித முன்னறிவித்தளுமின்றி திடீர் விஜயம் மேற்கொண்டார்.
1975 ம் ஆண்டு ஹிரியால பலுகஸ்தமன பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் தாம் விநியோக உத்தியோகத்தராக கடமையாற்றிய போது அங்கு கணக்காளராக கடமையாற்றிய திருமதி குசும் பெதியாகொடை என்பவர் சுகவீனமுற்றிருப்பதாக அறிந்து அவரை நேரில் சென்று சுகம் விசாரித்தார் இந்த திடீர் விருந்தினரை எதிர்பார்த்திராத திருமதி பெதியாகொடை அவர்களுக்கு அவரது கண்களையே நம்ப முடியவில்லை.
அவரது சுக துக்கங்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் திருமதி பெதியாகொடை அவர்களுக்கு விரைவாக ஆரோக்கியம் கிடைக்க பிரார்த்தித்தார்.