அட்டாளைச்சேனை ஒளிராதா?





Suhaib Umarlebbe



2016.09.24 ஆந் திகதி  அட்டாளைச்சேனையில் தற்போதைய கிழக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ.M.S.உதுமா லெவ்வை அவர்களின் புதல்வியின் திருமண நிகழ்விற்கான Registration நிகழ்வு இடம் பெற்றது.

Registration நிகழ்வு அட்டாளைச்சேனை ஜும்ஆப் பெரிய பள்ளி வாசலிலும், அதனைத் தொடர்ந்து திருமண வைபவம் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் கல்யாண  மண்டபத்திலும் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.  அந்நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது.

அதற்காக 2016.09.24 ஆந் திகதி இரவு 7.15 மணியளவில் கோணாவத்தைப் பாலத்தின் வழியாக தற்போதைய எதிர்க் கட்சித் தலைவரின் வீட்டுக்கு நான் நேரடியாகச் சென்றேன்.  

அவ்வேளை கோணாவத்தைப் பாலத்தின் கிழக்குப் பக்கமாவுள்ள பல மின்கம்பங்களிலுள்ள மின் குமிழ்கள் ஒளிராமல் இருளில் மூழ்கிக் காணப்பட்டதை என்னால் அவதானிக்க முடிந்தது.  

தற்போதைய கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவரின் பிரதேசத்திற்கு இந்நிலை என்றால் ?   மற்றவர்களின் நிலை என்னவாகும் ? 

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளரே !
இது உங்களின் அன்பான கவனத்திற்கு !

கோணாவத்தைப் பாலத்தடிப் பிரதேசங்களில் காணப்படும் ஒளிராத மின் குமிழ்களை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா ?