கொள்ளுப்பிட்டிய பிரதேசத்திலுள்ள தற்காலிக விடுதியொன்றிலிருந்து கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதியின் அறையில் இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
22 வயதையுடைய இந்த கடற்படை வீரர் நுகோகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது. இவர் நேற்று முன்தினம் இந்த விடுதிக்கு வருகை தந்துள்ளார்.
இவர் அறையிலிருந்து வெளியே வராத காரணத்தினால், விடுதியின் முகாமையாளர் பொலிஸுக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

