மீரியபெத்தை கொஸ்லந்தையில் அக்டோபரில் புதிய வீடுகள்



(க.கிஷாந்தன்)

மண்சரிவு இடம்பெற்று 02 வருடங்கள் நெறுங்கியுள்ள இவ் கால கட்டத்தில் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதாக அதாவது அக்டோபர் 22ம் திகதி வீடுகளை கையளிப்பதற்கு தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், வீடுகளில் காணப்படுகின்ற மின்சாரம், நீர், வீதி நிருமானம் போன்ற குறைப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்து மக்களிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப் போவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்தார்.

மீரியபெத்த மக்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீடுகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று 19.09.2016 அன்று மக்கள்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொஸ்லாந்தை மீறியபெத்த பிரதேசத்தில் 2014.10.29 அன்று இடம்பெற்ற பாரிய மண்சரிவில் உயிர் நீத்த மக்களின் உறவினர்கள் தொடர்ந்தும் பூனாகலை மாகந்த தொழிற்சாலையிலேயே தங்கி இருக்கின்றனர். இவர்களுக்கான 72 வீடுகள் இதன்போது கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் திகாம்பரம், கொத்மலை பகுதியில் நான் எனது அமைச்சரவையின் கீழ் வீடுகளை குறுகிய காலத்தில் கட்டி முடித்துள்ளேன், ஆனால் இங்கு வீடுகளை கட்டி முடிப்பதில் சிரமம் காணப்படுகிறது. இதற்கு காரணம், இங்கு ஒரு அமைச்சிற்கு கீழ் வந்திருந்தால் 6 மாதத்தில் அல்லது 1 வருடத்தில் வீடுகளை கட்டி முடித்திருக்கலாம் ஆனால் இங்கு பலதரப்பட்ட நிறுவனங்களின் தலையீட்டில் வீடுகள் நிருமாணிக்கப்பட்டு வருவதால் தாமதம் நிலவுவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர்