நாமலின் அதிசொகுசு கார் சிக்கியது



நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும், அதிசொகுசு காரொன்றை, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். போர்டு மஸ்ட் டெகன் வகையைச் சேர்ந்த காரே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தக் கார், 2010ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அன்றிலிருந்து சுமார் 6 வருடங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டதன் பின்னர் மற்றொருவருக்கு அக்கார் விற்கப்பட்டுள்ளது. காரின் தற்போதைய உரிமையாளரிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னரே, அக்காரை கைப்பற்றியுள்ளனர்.