சிரேஷ்ட மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டபேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரை நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான மஜிஸ்ட்ரேட் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி பேராதெனிய பல்கலைக்கழக வளாகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இவர்களினால் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் நான்கு பேர் தற்பொழுது பேராதெனிய பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

