#சம்பியனானது பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகம்
பள்ளிக்குடியிருப்பு யங்மேன் விளையாட்டுக் கழகத்தின் 34வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட அணிக்கு11பேர் கொண்ட 10 ஓவர்கள் மட்டுப்படு த்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி (9.10. 2016) பள்ளிக்குடியிருப்பு அதாவுல்லா விளையாட்டு மைதானத்தில் மிக கோலாகலமாக நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் பாலமுனை அல் அறபா மற்றும் பள்ளிக்குடியிருப்பு யங்மேன் விளையாட்டுக் கழகங்கள் மோதிக் கொண்டன.இதன் போது நாணயச் சுழற்ச்சியில் வெற்றி பெற்ற யங்மேன் அணியினர் நிர்னயிக்கப்பட்ட 10ஓவர்கள் முடிவில் 7 விக்கட்களை இழந்து 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
73 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அல் அறபா அணியினர் 9.3ஓவர்கள் முடிவில் 7 விக்கட்களை இழந்து 76 ஓட்டங்களை பெற்று வெற்றியினை தனதாக்கிக் கொண்டனர்.
இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக அல் அறபா அணியின் தலைவர் சுபியான்,
தொடர் ஆட்ட நாயகனாக அம்ஜத் மற்றும் இப்போட்டியில் ஹட்ரிக் சாதனை நிகழ்த்தியதற்காக சபான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் விஷேடமாக அல் அறபா அணியின் முன்னால் தலைவர்,தற்போதைய முகாமையாளருமாகிய A.G.அஸ்மிலின்வழிகாட்டுதலுடன்,மிஆத்,
அம்ஜத்,நௌசாத் ஆகிய சிரேஷ்ட வீரர்களின் பங்களிப்புடனும் கின்னத்தை கைப்பற்றிக் கொண்டது.
யங்மேன் விளையாட்டுக் கழத்தின் தலைவர் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாரத்ன பிரதம அதிதியாகவும் ,அக்கறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் றாசிக் கௌரவ அதிதியாகவும்,விஷேடே அதிதியாக அக்கறைப்பற்று பிரதேச சபையின் முன்னால் உபதவிசாளார ஹக்கீம் மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டு கின்னங்களையும்,பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

