பிரதமர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்!




இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
பிரதமரின் ‌மாளிகையில் அரசு சார்பில் தேசிய தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
அதேபோல், ஆஸ்திரேலியாவில் தீபாவளி பண்டிகை ஆடல் பாடலுடன் கொண்டாடப்பட்டது. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இந்திய சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்‌ட மாநிலங்களை சேர்ந்த இந்திய மக்கள் ஒன்று கூடி தீபாவளி திருநாளை கொண்டாடினர். பிரின்ஸ்பேன் நகரிலும் செயிண்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மேளதாளங்கள் முழங்க, கலாச்சார நடனங்கள் அடங்கிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்திய சமூகங்களின் கூட்டமைப்பு தலைவர் பழனிச்சாமி, ஆஸ்திரேலிய அமைச்சர், எம்பிக்கள், வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.