பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனறும் முன்னாள் பிரதியமைச்சருமான நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப்பினையிலும் 10 இலட்சம் ரூபாய்கள் கொண்ட இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுவிக்க பூகொடை நீதவான் டி.ஏ. ருவன்பதிரன உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை, குறித்த வழக்கு ஜனவரி 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு உரித்தானதாக தெரிவிக்கப்படும் மல்வானை மாளிகை தொடர்பிலேயே திருக்குமரன் நடேசன் கைது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

