இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்த தீர்மானம் குறித்து, வினவுவதற்காக பணிப்பாளர் நாயகத்தை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிடர் நாயகமாகவும் அவர் குறிப்பிட்ட காலம் சேவையாற்றியிருந்தார்.

