(அஷ்ரப் ஏ சமத்)
கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ”டொக்டா்ஸ் போரம் ” உலக ஆசிரிய தினத்தினை முன்னிட்டு கல்முனை சாஹிராவில் கற்பித்த ஆசிரியா்களது வீடுகளுக்குச் சென்று ஆசிரியா்கள் மற்றும் அவா்களது பாரியாா் உடற் பரிசோதனைகள் சிகிச்சைகளையும் அளித்தனா். அத்துடன் நினைவுப் பரிசுகளையும் அவா்களுக்கு வழங்கி வைத்தனா்.
கல்முனை சாஹிராவின் கற்ற 25க்கும் மேற்பட்ட பழைய மாணவா்கள் வைத்தியா்களாக அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்றனா். . அன்றைய தினம் டொக்டாஸ் போரத்தின் தலைவா் டொக்டா்ஸ் சனுஸ் காரியப்பா், தலைமையில் கொழும்பு கலாதாரி ஹோட்டலில் ஒன்று கூடுதல் நிகழ்வும் ஒன்றும் நடைபெற்றது. இந் நிகழ்வில் கொழும்புக்கிளையின் தலைவா் பொறியியலளா் எம். மஹிசான் வைத்தியா்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

