வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
பாராளுமன்றத்தில் இன்று மாலை 5 மணியளவில் குறித்த வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இதில் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 162 பேரும், எதிராக 55 பேரும் வாக்களித்திருந்தனர்.
மேலும் குறித்த வாக்கெடுப்பிற்கு 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தரவில்லை.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வாய் மூலமான வாக்கெடுப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வாக்கெடுப்பு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பெரும் கரகோஷங்கள் எழுந்ததுடன், இதற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

