மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன குடும்பஸ்தரின் சடலம் உறுகாமக் குளம் பகுதியில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
உறுகாமம் பாரதி கிராமத்தினை சேர்ந்த பழனிவேல் மனோகரன் (39வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் உறுகாம குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியிருந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் குறிப்பிட்டனர்.