பாயிஸ் முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்ததாலும் நாம் கொஞ்சம் கூட அலட்டவில்லை





(ACMC-PUTTALAM)

முஸ்லிம் காங்கிரஸ் எப்படி அபிவிருத்திகளை செய்யும் , அதன் தலவைர் எப்படி சுறுசுறுப்பானவர் என்பதை பற்றியெல்லாம் கடந்த காலங்களில் பாயிஸ் அவர்கள் அவர்களின் வாயால் பல மேடைகளில் சொல்லியும் உள்ளார் .

அதை போன்று பாயிஸ் எப்படி பட்டவர் என்று கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும் பல இடங்களில் கூறியும் உள்ளார் .

பாயிசை கட்சிக்குள் சேர்த்தால் நான் புத்தளம் அம்மணமாய் தான் வரவேண்டும் என்று ஒரு கட்டத்தில் சொன்னார் , இன்னொரு முறை பாயிஸ் கல்யாண வீட்டுக்கு போனால் அவர் தான் மாப்பிளை , மையத்து வீட்டுக்கு போனால் அவர் தான் மையத்து என்றும் சொன்னார் .

இப்படியெல்லாம் ஆள் மாறி ஆள் மாறி வசைப்பாடிவிட்டு இன்று கட்டி தழுவி கிஸ் பண்ணுவதால் பழையவை எல்லாவற்றையும் மக்கள் மறந்து விடப்போவதில்லை .

இன்று மக்கள் முன்பு போன்று இல்லை, சகல விடயங்களையும் பற்றி அணு அணுவாக அறிந்தே வைத்துள்ளார்கள் .இதன் படி வரும் தேர்தல்களில் தக்க பாடத்தை இவர்களுக்கு புகட்டுவார்கள் .

இன்னொரு விடயத்தையும் சொல்லணும் சிலர் நினைப்பது போன்று பாயிஸ் பெரிய அரசியல் வித்தகர் இல்லை அப்படி என்றால் அவரின் 30 வருட அரசியல் வாழ்வில் அவர் எங்கோ சென்றிருக்க வேண்டும் . ஆனால் அவர் இன்னும் சுற்றி சுற்றி நகர சபைக்குள் தான் முடங்கி கிடக்கிறார் .

நமது தலைவர் வெறும் 15 வருடத்தில் நான்கு தடவை பாராளுமன்றம் சென்று , அமைச்சராகி மக்களுக்கு பல சேவைகளை செய்து கட்சி ஆரம்பம் செய்து இன்று அவரோடு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் உருவாக்கி உள்ளார் .இது தான் அரசியல் சாணக்கியம் .

நமது தலைமையுடன் ஒப்பிடும் போது பாயிஸ் வெறும் ஜீரோ . அதனால் தான் நமது தலைமை சரியாக கணிப்பீடு செய்து பாயிசை கட்சிக்குள் உள்வாங்காமல் விட்டார் . பாயிசும் வேறு இடம் இன்றி போய் முஸ்லிம் காங்கிரசில் ஓட்டினார் இதுவே நடந்த உண்மை .

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாரையெல்லாம் வேண்டாம் என்று புறக்கணிப்பு செய்கிறதோ அவர்களை எல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தூக்கி வைத்து அழகு பார்க்கும் . 

இந்த பட்டியல் பாயிஸ், ஹுனைஸ் பாருக் , YLS ஹமீத் என்று தொடரும் .

நண்பர் பாயிஸ் அவர்களே டஸ்பின் கட்சியில் அரசியலை தொடர இருக்கும் உங்களுக்கு நமது வாழ்த்துக்கள் .