சிறைச்சாலைக்கு பழுதடைந்த அரிசி



மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வழங்கவென தயாராக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பழுதடைந்த மனித பாவணைக்குதவாத அரிசி மற்றும் மீன் மரக்கறிகளை மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  (23) புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு மூன்றாம் குறுக்கு கல்லடித்தெரு எனும் இடத்திலுள்ள களஞ்சியசாலை யொன்றில் வைத்தே இந்த பாவணைக்குதவாத அரிசி மற்றும் மீன் மரக்கறிகளை கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர் எம்.அச்சுதன், டாக்டர் கிறிதரன் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களான கே.ஜெய்சங்கர், வி.ரி.சகாதேவன், எஸ்.அமுதமணி ஆகியோர் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு உணவுப் பெருட்களை வழங்கி வரும் ஒப்பந்தகாரரின் வீட்டிலுள்ள களஞ்சிய சாலையில் திடீர் சோதனையை இன்று செவ்வாய்க்கிழமை நடாத்திய போதே மனித பாவணைக்குதவாத உழுத்த அரிசி மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் போது பாவணைக்குதவாத 150 மூடை உழுத்த அரிசி மற்றும் பழுதடைந்த 200 கிலோ மீன்கள், பழுதடைந்த மரக்கறிகள், உழுத்த பருப்பு போன்ற மரக்கறிகளும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இந்த உணவுப் பொருட்களை களஞ்சியப் படுத்தியிருந்த இதன் உரிமையாளரே மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான உணவுக்காக மேற்படி உணவுப் பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வந்தார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பவுள்ளதுடன் இதை வைத்திருந்த இதன் உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் மன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்
[facebook][blogger]

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.