(க.கிஷாந்தன்)
மலையக இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுதுறையினை ஊக்குவிக்கும் பொருட்டு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தஸ்ரீ அவர்களின் ஏற்பாட்டில் அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 20ம் திகதி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் 14 விளையாட்டு கழகங்கள் பங்குபற்றியது.
இதன்போது இப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தெரிவாகிய சின்னதோட்டத்தினை சேர்ந்த இரண்டு அணிகள் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தினை பெற்றுகொண்டது.
இதில் வெற்றிபெற்ற அணிகளுக்கு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தஸ்ரீ மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச இலங்கை வங்கியின் முகாமையாளர் எஸ்.ராம் ஆகியோர் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

