கருத்துக்கணிப்பில் ஹிலாரி முன்னிலை



அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நியூ ஃபாக்ஸ் நியூஸ் சானல் தேர்தலுக்கு கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவை நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஹிலாரி கிளிண்டன் 48 சதவீதம் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் 44 சதவீதம் ஓட்டுகள் பெற்று பின்தங்கி உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். அமெரிக்கா மட்டுமல்லாது உலகமே அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது