(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
அக்கரைப்பற்று-01 ம் குறிச்சி,கிழக்கு வீதியைச் சேர்ந்த அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா முன்னாள் அதிபர் தாஹா பாறுாக் சேர், இன்று அக்கரைப்பற்றில் காலமானார்.
அக்கரைப்ற்றில் முன்னொரு காலத்தில் கோலோச்சிய முஹம்மத் தம்பி உபாத்தியாயரின் சிரேஸ்ட புதல்வரான இவர், அக்கரைப்பற்று, ஆயிஷா பாளிகாவின், அதிபராக ஓய்வு பெறும் வரையில் பணிபுரிந்தார்.
இவரது காலத்தில் மாணவிகளின் பல்கலைக்கழக பிவேசம் கணிசமாகக் காணப்பட்டது.மாணவிகளின் கற்றல் நடவடிக்ககைளுக்கு அப்பால், புறக்கிருத்திய செயற்பாடுகளிலும், ஒழுக்க விழுமிங்களிலும், அக் கல்லுாரி புகழ்பெற்றது. கற்றவர்களின் குடும்பத்தினைச் சேர்ந்த இவரது சிந்தனைகள் எப்போதும் கல்வி பற்றியதாய் அமைந்தது.இரு பிள்ளைகள் சகோ பாஷி, சகோ ஆஷிக் அவர்களின் தந்தையுமாவார்.
நண்பர்கள் அனைவரும் அவருக்காகவும், அவரால் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்திற்கு #CEYLON24 தனது அனுதாபங்களைப் பகிர்கின்றது.

