சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டியில் 6 விக்கெற்றுக்களால், இலங்கை அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.
இதில் இலங்கையை எதிர்கொள்ளும் சிம்பாபே அணி நாணயசுழற்சியை வசப்படுத்தி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் எந்தவொரு வீரரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வௌியேறினர்.
இதன்படி 36.3 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ள சிம்பாபே, 160 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை சார்பில் ஜெப்ரி வெண்டசே மற்றும் எசெல குணரத்ன ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை சாய்த்துள்ளனர்.
இதற்கமைய இலங்கைக்கு 161 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

