2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்திற்கு, அமைச்சர் சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டையில் இன்று பதிலளித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாவது,
இத்தகைய பொய்யைக் கூறுவதால் என்ன நேரும்? இலங்கைக்கு வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் ஏன் அங்கு செல்ல வேண்டும் என எண்ணுவார்கள். ஏனெனில், இலங்கையில் நிலையற்ற தன்மையொன்று உருவாகுகின்றமையால், நாம் ஏன் இலங்கைக்குச் சென்று கோடிக்கணக்கில் முதலீடுகளை செய்து, தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் எழும். இதுவே 2017 ஆம் ஆண்டு அரசாங்கம் மாற்றமடையும் என்று சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு கூறியமைக்கான நோக்கமாகும். இதுவே ரகசியம். இது மிக மோசமானதொன்றாகும். தொழிற்சாலைகளை உருவாக்கி பிரேமதாச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க குடும்பத்தினருக்கா தொழில்கள் வழங்கப்படும்? முடிந்தால் 2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தைக் கவிழ்க்குமாறு நான் பகிரங்கமாக சவால் விடுக்கின்றேன்.

