துமிந்த என்னை அச்சுறுத்தினார்




ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ விலக வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் நகோயா நகரில் இன்று இலங்கையர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து மஹிந்த விலக வேண்டும் என அச்சுறுத்தப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன அல்ல, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க என்னுடன் தொடர்பு கொண்டு இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது எமது அரசாங்கம். எனவே, பதவியை கையளிக்காவிட்டால், நீதிமன்றம் சென்று அதை நாம் பெற்றுக்கொள்வோம் என துமிந்த திஸாநாயக்க தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.