கொத்மலை, மாவில பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புஸ்ஸல்லாவ – ரொச்சல் தோட்டத்தைச் சேர்ந்த 50 வயதான ஒருவரே இன்று பிற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்கானார்.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்திருந்ததாக வகுபிட்டிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இவர் தொழிலுக்கு சென்று வீடு திரும்புகையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் குளவிக்கொட்டுக்கு இலக்கானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சடலம் வகுபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

