மேல் மாகாணத்தை மையப்படுத்தி 24 மணி நேரமும் செயற்படக் கூடிய டெங்கு முறைப்பாட்டு மத்திய நிலையங்கள் மூன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த நிலையங்களில் பொலிஸாரையும் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றைய தினமாகும் போது 48,682 டெங்கு நோயாளர்கள் பதிவாகி இருப்பதுடன், 77 மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அளவு ஓரளவில் இருந்தாலும், மேல் மாகாணத்தில் அதிகமான நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
விஷேடமாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் மோதரை, மட்டக்குளி, தெமட்டகொடை, பொரளை மற்றும் கிருலப்பனை போன்ற பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்காக நுளம்பு ஒழிப்பு துறை உதவியாளர்கள் 500 பேரை மேல் மாகாணத்திற்கு இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்