நிறைவேற்றப்பட்டது



மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு இன்று மாலை பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக 83 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 36 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தன.
ஒதுக்கீட்டினை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு ஒருங்கிணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.