பாதை திறந்து வைப்பு



(க.கிஷாந்தன்)

அட்டன் ஆரியகம பகுதியின் ஒரு பகுதிக்கு பாதை செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக 09.12.2016 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் 8 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பாதை கொங்கீறிட் பாதையாக புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.