சர்வதேச தேயிலை தினம்



(க.கிஷாந்தன்)

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு 11.12.2016 அன்று நுவரெலியா பரிசுத்த திருத்துவ ஆலய மண்டபத்தில் தேயிலை விளைந்த தேசம் தொழிலாளர் உரிமை தேசம் எனும் தொனிப்பொருளின் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

“தேயிலை விளைந்த தேசம் தொழிலாளர் உரிமை தேசம்” என்பது இந்த வருடத்திற்கான தேயிலை தினத்திற்கான தொனிப்பொருளாகும். 

பல தோட்ட தொழிலாளிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை இலங்கை மெத­டிஸ்த திருச்சபையின் பெருந்தோட்ட சமூக மேம்­பாட்டு திருப்­பணி ஒழுங்கமைத்திருந்தன. 

இதில் தோட்ட தொழிலாளிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நுவரெலியா பஸ் தரிப்பிடத்திலிருந்து பரிசுத்த திருத்துவ ஆலய மண்டபம் வரை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தேயிலை சம்பந்தமான பல நிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு தேயிலை ஆராய்ச்சி பற்றி உரையாடலும் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மலையக தோட்ட தொழிலாளிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.