உலகின் மிகக் கீழ்த்தரமான தமிழக ஊடகங்கள்



(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
ஜெயலலிதா மறைந்தாக தமிழக ஊடகங்கள் ஊதிப் பெருக்கின. தற்போது அதனை, அப்பலோ மருத்துவ மனை மறுத்துள்ளது. வேறொரு உபகரணத்தின் உதவியுடன் ஜெயாவின் உடல் நிலை இயங்குவதாக தெரிவிக்கின்றது. ஒருவரது மரணத்தை ஆராதிக்கும் அரக்க குணம், ஆராதிக்கும் ஆக்ரோசம்  தமிழக ஊடகங்களைத் தவிர, உலகில் வேறு ஊடகங்களுக்கு இல்லையெனலாம்.

"இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடலுக்கு உலகில் ஒரு உத்தம புத்திரி அம்மா- (அம்மு)      ஜெயலலிதா தான்.

செ. செயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி செயராம்[2] (பிறப்பு:4 பிப்ரவரி 1948) தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 இற்கும் மேற்பட்ட தமிழ்தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக உள்ள இவரைப் "புரட்சித் தலைவி" என இவரது ஆதரவாளர்கள் அழைப்பர்.[3] தமிழ்நாடுதிருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்ட இவர்,[சான்று தேவை] கர்நாடக மாநிலம்மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர்.
1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை அறிவித்துக் கொண்டார். ஜானகி இராமச்சந்திரனுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ரூ.66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், 2014 செப்டம்பர் 27 இல் செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[4][5][6][7] பதவியில் இருக்கும் போதே பதவியில் இருந்து அகற்றப்பட்ட முதலாவது இந்திய மாநில முதல்வர் செயலலிதா ஆவார்.[8][9] 2015 மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து செயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 5-வது முறையாக செயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து [10] மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

திரையுலகப் பங்களிப்பு

ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார். [11] மேலும் சிவாஜி கணேசன்எஸ். எஸ். ராஜேந்திரன்ஜெய்சங்கர்முத்துராமன்ரவிசந்திரன்சிவகுமார்ஏ. வி. எம். ராஜன்என். டி. ராமராவ்நாகேஸ்வரராவ்தர்மேந்திராபோன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அரசியல் பங்களிப்பு


பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதிஎம்ஜிஆருடன்ஜெயலலிதா
1981ல் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான இவருக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னால் மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அமர்ந்திருந்தார்.[12] எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து [13] 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

சட்டமன்றப் பொறுப்புகள்

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்

  1. 1989 முதல் 1991வரை.

தமிழக முதல்வர்

ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.
  1. ஜூன் 241991 முதல் மே 111996 வரை - தமிழகத்தின் 11 வது முதல்வர்.
  2. மே 142001 முதல் செப்டம்பர் 212001 வரை - தமிழக முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
  3. மார்ச் 22002 முதல் மே 122006 வரை - தமிழகத்தின் 14 வது முதல்வர்.
  4. மே 162011 முதல் செப்டம்பர் 272014 வரை - தமிழகத்தின் 16 வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது),
  5. மே 232015 முதல் மே 222016 வரை தமிழகத்தின் 18 வது முதல்வர்
  6. மே 232016 முதல் இன்று வரை தமிழகத்தின் 19 வது முதல்வர்

சட்டமன்ற உறுப்பினர்

ஆண்டுநிலைமைஇடம்
1989வெற்றிபோடிநாயக்கனூர்
1991வெற்றிபர்கூர்காங்கேயம்
1996தோல்விபர்கூர்
2002வெற்றிஆண்டிப்பட்டி
2006வெற்றிஆண்டிப்பட்டி
2011வெற்றிஸ்ரீரங்கம்
2015வெற்றிடாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்
2016வெற்றிடாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்
2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெற்ற 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி\நிராகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கோ அதற்கு மேலோ தண்டனைபெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டன.[14] ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி செயா, கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் சட்ட உட்கூறு 8(3) கீழ் வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். இச்சட்டத்தின் படி ஒருத்தர் இரு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் மனுவை தள்ளுபடி செய்யலாம். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். அவரது மேல் முறையீடு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பாக வென்றார்.

2016 தேர்தலில் போட்டி[தொகு]

2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் போட்டியிட்டார்.அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, செயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும், கடன் ரூ.2.04 கோடி. 2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது. [15] ஏப்பிரல் 25, 2016 அன்று வேட்புமனு அளித்தார்[16]. அத்தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

முதல் அமைச்சர்[தொகு]

முதல்வரைதேர்தல்
199119961991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
2001 மே2001 செப்டம்பர்தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவிவகித்தார்
200220062001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
2011செப்டம்பர் 27 , 20142011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
2015 மே 232015 ஆர். கே. நகர் இடைத்தேர்தல்[17]
இவர் மேல் வழக்குகள் இருந்தாலும் 2001, மே அன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து 2002, மார்ச்சு மாதம் முதல்வராக பதவியேற்றார்.[18] 2002இல் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலுருந்து விலகினார். [19] 2002, பிப்பரவரி 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்றார்.[20]

ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் சாதனைகள்

1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது.
2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் வெற்றிபெற்றது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல்  நேரடியாகவும், 7இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான்.
மேலும் 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
அது மட்டுமின்றி 2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக  வெற்றிவாகை சூடியது.

அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்கள்[தொகு]

மேலும் அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.

சட்டசபை[தொகு]

வருடம்பொதுத்தேர்தல்கிடைத்த வாக்குகள்வெற்றிபெற்ற தொகுதிகள்தலைவர்
19776வது சட்டசபை5,194,876131எம்.ஜி.ஆர்
19807வது சட்டசபை7,303,010129எம்.ஜி.ஆர்
19848வது சட்டசபை8,030,809134எம்.ஜி.ஆர்
199110வது சட்டசபை10,940,966164ஜெயலலிதா
199611வது சட்டசபை5,831,3834ஜெயலலிதா
200112வது சட்டசபை8,815,387132ஜெயலலிதா
200613வது சட்டசபை10,768,55961ஜெயலலிதா
201114வது சட்டசபை1,41,49,681151ஜெயலலிதா
201615வது சட்டசபை1,76,17,060134ஜெயலலிதா
இதில் நான்கு முறை ஜெயலலிதா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக.

விருதுகளும் சிறப்புகளும்

இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

புனைப் பெயர்கள்

  • 'அம்மு' என்று அழைக்கப்பட்டார். 1991 தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று முதல்வரான பின்னர் மரியாதை கருதி அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார்.[21]
  • புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ம. கோ. ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவிஎன்றும் அழைக்கப்படுகிறார்.