தகுதியானவர்களுக்கே தட்டுப்பாடு



கொழும்பு – ஹூனுப்பிட்டிய கங்காராம விகாராதிபதியின் 73 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு சீனிகம பகுதியில் இன்று தொழில்நுட்பக் கல்லூரியொன்று திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமரும் கலந்து கொண்டிருந்தார்.
தொழிற்பயிற்சிகள் மூலம் நாட்டில் சிறந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக இந்நிகழ்வில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் தொழில் வாய்ப்புகளுக்கு தட்டுப்பாடில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, தகுதியானவர்களுக்கான தட்டுப்பாடே நிலவுவதாக சுட்டிக்காட்டினார்.