கல்முனை பிராந்திய டெங்கு விழிப்புணர்வு




Suhaib Umarlebbe

கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுள் நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை தெற்கு போன்ற பிரதேசங்களில் டெங்கு நோயின் தாக்கம் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது.

அப்பிரதேசங்களில் இது வரையில் 495 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில் 85 பேர் நேரடித் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவ்விடயம் தொடர்பாக நேரடியாக ஆராய்ந்து தீர்வினைக் கானும் நோக்கிலான கூட்டம் 2016.12.02 ஆந் திகதி வெள்ளிக் கிழமை  காலை 10.30 மணியளவில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பணிமனையில்   ஜனாப் Dr.A.L.அலாவுத்தீன் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

அந்நிகழ்வில் அம்பாரை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜனாப்.A.T.M.றாபி அவர்களும், கல்முனை மாநகர ஆணையாளர், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், பல பிரதேச சபைகளின் செயலாளர்களும் அவற்றின் பிரதி நிதிகளும், பல வைத்தியர்கள், MOH, SPHI, PHI, கடலோர பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், மீன்பிடித் திணைக்கள உத்தியோகத்தர்கள், சூழல் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், இன்னும் பல திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகர்களும்  கலந்து கொண்டனர். 

அதன் போது டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாப்பது சம்பந்தமாக மிகவும் காரசாரமான முறையில் விரிவாக ஆராயப்பட்டு அதன் பிரதி பலிப்பாக 2016.12.03 ஆந் திகதி சனிக் கிழமை காலை 7.30 மணிக்கு சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து பொலிசாரின் உதவியோடு சோதனை மற்றும் சிரமதான நிகழ்வினை  கல்முனை கடற்கரைப் பள்ளியிலிருந்து ஆரம்பித்து காரைதீவு வரையில் மேற்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரைப் பிரதேசங்களில் உள்ள மீன் பிடிக்கும் தோணிகளுக்குள்ளும், பாவிக்கப்படும்,  பாவிக்கப்படாத கிணறுகளுக்குள்ளும், கட்டிக் குறையில் கிடக்கும் வீடுகளிலும், குப்பை கூளங்களுடன் இருக்கும் வடிகான்களிலும், வெளியில் பாவிக்கப்படாத பாத்திரங்களிலும்  டெங்கு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படுகின்றது.   அவற்றை பாடசாலை  மாணவர்களை விழிப்படையச் செய்வதன் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.