அப்துல் ராசிக் பிணையில் விடுதலை



தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளர். கொழும்பு மாளிகாவத்தை பிரபதீப மாவத்தையில் நவம்பர் 3ஆம் திகதி  நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையிலும் மக்களை தூண்டும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.