பொலிஸார் மீது தாக்குதல்



கடான - கொந்தகங்முல்ல பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது அதில் பயணித்த நபர்களாலேயே குறித்த பொலிஸார் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதேவேளை, இதன்போது படுகாயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், சந்தேகநபர்கள் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, இவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.