பல ஆயிரம் உயிர்களை பலி கொண்ட சுனாமி நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டது.2004-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் மறுநாள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இருப்பதற்கு பதில், கறுப்பு ஞாயிறாக அமைந்தது. சுனாமியின் வலியை மக்களிடம் கடத்தியவை புகைப்படங்களும், வீடியோக்களும் தான். உறவினர் ஒருவர் சுனாமி தாக்குதலில் இறந்து கிடக்க, அந்த உடலைப் பார்த்து கடற்கரை தரையில் மண்டியிட்டு,
முகம் மண்ணில் பதிய... கைகளை விரித்தபடி பெண் ஒருவர் கதறி அழுதபோது எடுக்கப்பட்ட படம் தான், சுனாமி பேரழிவின் அடையாளமாகவே மாறிப்போனது. பிணத்தின் கை மட்டும் தெரிய அதன் அருகே பெண் அழும் காட்சி புகைப்படமாக பதியப்பட்டிருந்தது.
சுனாமியின் பேரழிவுகளை பதிவு செய்ய புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்திய புகைப்படப் பத்திரிகையாளரான ஆர்க்கோ தத்தா பதிவு செய்த புகைப்படம் தான் அது. இழப்புகளின் ஒட்டுமொத்த வலிகளையும் பொட்டில் அறைந்தது மாதிரி உணர்த்தும் அந்தப் புகைப்படம் 2005-ம்ஆண்டின் 'வேர்ல்டு பிரஸ் போட்டோ'விருதை வென்றது.
2004ம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டு இலங்கையில் பேரழிவை உண்டாக்கிற சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றோடு 12 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.
இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு, மலேசியா, மடகஸ்கார், சோமாலியா என பல்வேறு
இடங்களைச் சென்றடைந்த குறித்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கையில் மாத்திரம் 35,957 பேர்
உயிரிழந்திருந்ததோடு 5000 பேர் வரை காணாமல் போயிருந்ததாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
90,000 கட்டிடங்களும் சேதமடைந்ததாகக் கணக்கிடப்பட்டிருந்த நிலையில்
சுனாமி நிவாரண நிதி மற்றும் வீதி அபிவிருத்தியில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றதோடு
அவை தொடர்பில் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.
கிழக்கில் சவுதி நிதியுதவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளும் பகிர்ந்தளிக்கப்படாது
இழுபறிக்குள்ளான நிலையில் 12 வருடங்கள் கழிந்துள்ளமை அவ்வேளையில் 9.3 ரிக்டர்
அளவு நில நடுக்கம் ஏற்பட்டிருந்ததாக அளவிடப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

