அக்கரைப்பற்றில் 312 மில்லிமீற்றர் அதிகூடிய மழை



நாட்டின் பல பாகங்களில் சில இடங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் அக்கரைப்பற்றில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 312 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அக்கரைப்பற்று காதிரியா வீதியிலிருந்து முறாவோடை  வரையான வீதியிலுள்ள வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கின. அஸ்ஸிராஜ் மகா வித்தியாலம், அல் பதுர், காதிரியா பாடசாலை உட்பட கரையோரைப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இரண்டாம் குறிச்சியின்  பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.

இதேவேளை, அட்டாளைச்சேனையில் 185.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் அம்பாறையில் 165 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..நாட்டின் பல பாகங்களில் சில இடங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.