இலங்கையில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் பெண்களின் அங்கத்துவத்தை 25 வீதமாக அதிகரிக்ககோரும் வகையிலான கையெழுத்துப் பெரும் போராட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஆதரவுடன் இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அனுசரனையுடன் இந்த கையெழுத்துப்பெறும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் இணைப்பாளர் செல்வி மு.கிருத்திகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது பெருமளவான பெண்கள் தமது கையொப்பங்களை இட்டு பெண்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.