யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணித் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்த பெண் மீது சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 25 வயதான தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

