வீதிக்கு அருகாமையிலுள்ள வாவிக்கரையில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடமாடிய சுமார் 14 அடி நீளமும் சுமார் 600 கிலோ எடையும் கொண்ட முதலையை இன்று காலை அப்பகுதி மீனவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மேற்படி முதலையை அப்பகுதியிலுள்ள மீனவர் வாடிக்கு அருகாமையிலுள்ள மரம் ஒன்றில் கட்டி வைத்துள்ளதுடன், காத்தான்குடி பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
குறித்த முதலையை பார்வையிட காத்தான்குடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதேச மக்கள் மஞ்சந்தொடுவாய் வாவிக்கரையை நோக்கி வருகைதந்த வன்னமுள்ளனர்

