(க.கிஷாந்தன்)
பண்டாரவளையிலிருந்து எல்ல நகருக்கு வானொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுச் செல்லப்பட்ட 852 பியர் போத்தல்களுடன், இரு சந்தேகநபர்களை பண்டாரவளை பொலிஸ் புலனாய்வு பிரிவினர், 24.01.2017 அன்று கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்தே, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பியர் போத்தல்கள் அடங்கிய 21 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

