நுவரெலியாவில் தேசிய பொங்கல் விழா



தேசிய பொங்கல் விழா இன்று (15) நுவரெலியா சினிசிட்டா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். 

அவருடன், இந்து கலாச்சார சிறைச்சாலைகள் புனரமைப்பு மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன், புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், 

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், அ.அரவிந்தகுமார், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உடபட பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.