மலையகத்தில் வறட்சி காலநிலை தொடர்ந்து நிலவினால் மின் உற்பத்தி அளவு குறைவடையும் நிலை தோன்றியுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலையகத்தில் தொடர்ந்து நிலவி வரும் வறட்சி காலநிலையினால் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை மேல் கொத்மலை போன்ற நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் தொடந்தும் வறட்சி நீடித்தால் நோட்டன் விமலசுரேந்திர, லக்ஷபான, நவலக்ஷபான, கெணியன், பொல்பிட்டிய ஆகிய நீர்மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியின் அளவு குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மின் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.