அதிபர் டிரம்பின் தடை அறிவிப்புகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் பாதுகாப்புத்துறை தீவிரம்



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

இராக் மற்றும் ஏமனிலிருந்து வந்த குறைந்தது ஏழு பேர் அமெரிக்காவிற்கு செல்ல முறையான விசா இருந்தும் எகிப்தில் விமானத்திற்குள் ஏற விடாமல் தடுக்கப்பட்டனர்.
நியுயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், இரு இராக்கிய அகதிகள் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த தடை உத்தரவு அமலாவதற்குமுன், அமெரிக்காவுக்கு உடனடியாக திரும்பும்படி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள சில ஊழியர்களை கூகுள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.