கொத்ல பிரதேசத்தில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட நேபாளத்தைச் சேர்ந்த பிக்குமார் பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த 17 பேரும் புசல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்ஸின் பிரேக் செயற்படாமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

