இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் இன்றைய நிலை
==============================
==============================
கடந்த காலங்களில் இலங்கையில் பெளத்தர்கள் , தமிழர்கள் , மலையகர்கள் என்று மூன்று சாரார்களுமே கல்வியைக் கற்பதில் கூடிய கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் இன்று இலங்கை முஸ்லிம் சமுகம் கல்வி வரலாற்றில் மலையக சமூகத்தையும் தாண்டி தமிழில் சமூகத்தையும் தாண்டும் அளவுக்கு பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது . அல்ஹம்துலில்லாஹ்.
இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை அவர்கள் தங்களது மார்கத்தின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு அதிகம் உள்ளது. காரணம் நாங்கள் இலங்கை என்ற பெளத்த நாட்டில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றோம்.
.
இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் உயர் கல்வியில் ஆர்வம் காட்டுகின்றன். இதனை கடந்த காலங்களில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் தெரிவான மாணவ மாணவிகளின் பட்டியல்களில் எமக்கும் பார்க் முடியும். இதே நிலை இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் அதிகரித்துள்ளது. முஸ்லிம் மாணவர்களைவிட முஸ்லிம் மாணவிகளே அதிகம் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்குத் தெரிவாகின்றன்.
கடந்த 5 ஐந்து ஆண்டுகளாக முஸ்லிம் ஆண்கள் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்குத் தெரிவாகுவதைவிட முஸ்லிம் பெண்கள்தான் அதிகம் தெரிவாகியுள்ளனர். இது ஒருபுறம் எமது பெண்கள் படிக்கின்றார்கள் என்ற சந்தோசத்தையும் இன்னொரு புறம் எமது முஸ்லிம் ஆண்களின் கல்வி நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற கவலையையும் தருகின்றது.
இன்று இலங்கையின் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பில் முஸ்லிம் ஆண்களை விடவும் முஸ்லிம் பெண்களே அதிகம் உள்ளனர் . அது மருத்துவப்பீடமாக இருக்கலாம், வர்தகப் பீடமாக இருக்கலாம் , கலைப்பீடமாக இருக்கலாம் இப்படி முஸ்லிம் பெண்கள் பல துறை சார்ந்து கற்று வருகின்றனர் .
1) பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் கவனத்திற்கு
============================== ===
* பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் முஸ்லிம் மஜ்லிஸி அமைப்பு அனைத்து மாணவ மாணவிகளையும் அங்கத்தும் வகிப்பதற்கு வலியுறுத்த வேண்டும் . அவ்வாறு முஸ்லிம் மஜ்லிஸுடன் சேராவிட்டால் அவர்களுக்கு முஸ்லிம் மஜிலிசூடாக வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் .
* முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பினால் வாராந்தம் காலத்திற்குப் பொருத்தமான இஸ்லாமிய விரிவுரைகள் நடத்த வேண்டும் .
2) பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் கவனத்திற்கு
============================== ===
* இஸ்லாமிய வரையறைகளுடன் உங்கள் ஆடை அலங்காரங்களை வைத்து கொள்ள வேண்டும்.
* மேலும் பல்கலைக்கழகத்தில் இருக்கும் இரவு நேர கிளப்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் .
* இஸ்லாமிய வரையறை மீறிய குழு கற்கைகளைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் .
* இஸ்லாமிய வரையறைகளுடன் ஆண்களுடனான தொடர்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும் .
3) பெற்றோர்களின் கவனத்திற்கு
============================== ===
* உங்கள் பெண் பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகின்ற போது திருமணம் பேசி ( நிகாஹ் ) செய்து அனுப்புவது மிகவும் பொருத்தமானது.
* அப்படி திருமணம் பேசுவது கடினம் என்றால் உங்கள் பெண் பிள்ளைகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு கண்கானிக்க வேண்டும் .
Eg:- அவர்களின் துலைபேசி பாவனையை கண்கானிப்பது , அவர்களின் ஆடை அலங்காரத்தில் கூடிய கவனம் செலுத்தல் ( எப்படியான ஆடையை எனது பிள்ளை அணிகிறாள் என்று பார்க்க வேண்டும் )
4) இஸ்லாமிய நிறுவனங்களின் கவனத்திற்கு
============================== =======
* இலங்கையில் இருக்கும் அனைத்து இயக்கங்களும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும் .
* பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் முஸ்லிம் மஜ்லிஸுடன் இணைந்து காலத்திற்குப் பொருத்தமான இஸ்லாமிய விரிவுரைகள் நடத்த வேண்டும் .
இதில் " இஸ்லாத்தில் ஆண் பெண் உறவுகள் " இஸ்லாத்தின் ஆடை ஒழுங்குகள் , போன்ற தலைப்பில் நடத்துவது வரவேற்கக் கூடியது .
* பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குக் கஷ்டப்படும் முஸ்லிம் மாணவ மாணவிகளுக்குப் புலமைப் பரிசில்கள் வழங்குவதற்கு முன்வர வேண்டும் .
இதை எமது பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின்மீதுள்ள அக்கரையினால் நான் எழுதியது . இவற்றை எமது இலங்கை முஸ்லிம் சமூகம் பொருட்படுத்துகின்றபோது . எமது முஸ்லிம் சமூகத்தில் பாரிய இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்படும். மேலும் இலங்கை இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் சரியான தெளிவு கிடைக்கும் .
கட்டுரை
அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )வரிப்பத்தான்சேனை .

