தெஹிவளையில் இருவர் சடலமாக மீட்பு



தெஹிவளை - படோவிட பகுதி கால்வாயில் இருந்து இரண்டு சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும், உயிரிழந்தவர்கள் யார் என்ற விபரம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.