வெள்ளத்தில் கிழக்கு மாகாணம்



தொடர் மழை காரணமாக கிழக்கின் தாழ்வுப் பகுதிகள் அனைத்தும் வெள்ளம் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கரையோர பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், குறிப்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இந்த நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில் மற்றும் பொத்துவில் உள்ளிட்ட கரையோரபிரதேசங்களும் வெள்ளத்தினால் நிரம்பியுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லாறு ஓந்தாச்சிமடம் மகிளூர் குறுமண்வெளி எருவில் களுவாஞ்சிகுடி பட்டிருக்கும் களுதாவளை குருக்கள்மடம் ஆகிய கிராமங்களும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடச்சியாக பெய்து வரும் மழையினால் பிரதான வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவ்வப்போது போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.
இதேவேளை கடந்த ஓரிரு வாரங்களாக கிழக்கில் நிலவிய வெப்பநிலை நீங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.