வாக்குத் தவறாத ஜனாதிபதி



வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொட்டகலை பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளதாக செய்தியாளர் கிசாந்தன் குறிப்பிட்டார். 

கடந்த 21ந் திகதி தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி காரியாலய மைதானத்தில் திடீரென தரையிறக்கப்பட்டது. 

வானூர்திகள் தரையிறங்கியதை கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அந்த இடத்தில் கூடினார்கள். 

உலங்கு வானூர்தியில் இருந்து இறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நட்பு ரீதியாக பொதுமக்களுடன் உரையாடினார். 

இதன்போது அவர்களின் குறைநிறையைக் கேட்டறிந்த ஜனாதிபதி உடனடியாக ஆவண செய்ததாக தெரிவித்திருந்தார். 

இதனைத்தொடர்ந்து பிரதேச மாணவர்களினால் கொட்டகலை வைத்தியசாலைக்கு ஒரு நோயாளர் காவு வாகனம் தேவை என்பது குறித்து விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி ஒரு வாரத்திற்குள் நவீன் முறையிலான புதிய வாகனத்தை நேற்றைய தினம் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார். 

இதற்கு நன்றி கூறும் வகையில் இன்று இந்த நோயாளர் காவு வாகனத்தை பொதுமக்கள் சேவைக்காக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் நன்றி நவிழும் நிகழ்வும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. சாவித்ரி தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வின் போது நுவரெலியா மாவட்ட சுகாதார பிரிவின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.