தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே இராஜினாமா



தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தமது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையிடம் கையளித்துள்ளார்.
ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கற்கை நெறியைத் தொடரவுள்ளதால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.
தலைவர் பதவியிருந்து விலகினாலும், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் தாம் தொடர்ந்தும் செயற்படுவதாக சிறி ஹெட்டிகே தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் சிறி ஹெட்டிகே தனது கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்து நாட்டிற்கு திரும்பவுள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.