(இர்சாத்)
அக்கரைப்பற்று பொத்துவில் வீதி ஹொட்டேல் ஒன்றின் கழிவுகள், பாத்திமா பத்திரிகை விற்பனை நிலைய வீதியினையும், அதனை அண்டிய பாதையையும் பகுதியையும் தொடர்ந்தேர்ச்சியாக அசுத்த நிலையில் வைத்திருக்கின்றது. இது தொடர்பில் ஏற்கவே அக்கரைப்பற்று பிராந்திய சுகாதார அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். மீண்டும் அதே கதி இன்றுவரை தொடர்கின்றது. இக் கழிவுகள் அத்தனையும், HNB அருகில் உள்ள வடிகானில் கலக்கின்றது.இக் கான் அக்கரைப்பற்று மாநகர ஆணையளரின் கீழ் வருகின்றது. அதனைச் சுததிகரிப்பதற்கு எது வித நடவடிக்கையும் எடுக்காத அசமந்த நிலையில் உள்ள ஆணையர், வரிகளை மட்டும் முறைாயக அறவிடுகின்றார்.62 சிற்றுாழியர்கள் உள்ள மாநகர சபை, இவ் ஊழியர்களைப் பயன்படுத்தி, சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுத்த முடியாது எனக் கை விரிக்கின்றார். வெளியில் இருந்தாவது ஆட்களை ஒன்று திரட்டி இதனைத் துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்கவுமில்லை. பொதுச் சுகாதரப் பரிசோதகர்களும், இவ் வீதியின் அவலை நிலைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யாமல் இருப்தன் பிண்ணணி என்ன?
அக்கரைப்பற்று மாநகர சபையினை அழகு படுத்துவதற்கு ஒத்துழையுங்கள், கழிவுகள் இருந்தால் சட்ட நடவடிக்னை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் கண்களுக்கு இவை புலப்படவில்லை போலும்.
மொத்ததில் இவர்கள் அத்தனை பேருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமென பொதுமக்கள் புகாரிடுகின்றனனர்.

